ஹுண்டாயின் புதிய வெர்னா அறிமுகம்

ஹுண்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய வெர்னா மாடல் புது தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகமானது.
ஹுண்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய வெர்னா மாடல் காரை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஒய்.கே.கூ.
ஹுண்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய வெர்னா மாடல் காரை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஒய்.கே.கூ.

ஹுண்டாய் இந்தியா நிறுவனத்தின் புதிய வெர்னா மாடல் புது தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகமானது.
புதிய வெர்னா மாடலை அறிமுகம் செய்துவைத்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஒய்.கே.கூ தெரிவித்தது:
இப்போது அறிமுகமாகியுள்ள வெர்னா முற்றிலும் புதிய வடிவிலானது. தொழில்நுட்பம், திறன், பாதுகாப்பு அம்சங்கள் என பல மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. கண்ணாடிக் கூரை, அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க 6 ஏர்பேகுகள், பின்புறத்தில் பார்க்கிங் சென்சர்கள் அமைத்துள்ளோம். இது 5-ஆம் தலைமுறை மாடலாகும். இதில் 1.6 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஹுண்டாயின் வெற்றிகரமான கே2 தளத்தில் கட்டமைக்கப்பட்டது. புதிய வெர்னா மாடலை உருவாக்க ரூ. 1,040 கோடி முதலீடு செய்துள்ளோம். இதன் பெட்ரோல் மாடலின் விற்பனையக விலை ரூ. 7.99 லட்சம் முதல் ரூ. 12.23 லட்சம் வரை இருக்கும். டீசல் மாடலின் விற்பனையக விலை ரூ. 9.19 லட்சம் முதல் ரூ. 12.61 லட்சம் வரை இருக்கும். இருபதாயிரம் கார்களின் விற்பனைக்குப் பிறகு விலையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து முடிவு செய்வோம்.
கடந்த 2006-ஆம் ஆண்டு அறிமுகமான முதல் தலைமுறை வெர்னாவில் தொடங்கி இதுவரை விற்பனையான 4 தலைமுறை மாடல்களில் மொத்தம் 3.17 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளன. சுமார் 88 லட்சம் வெர்னா மாடல் கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com