முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் சென்செக்ஸ் 352 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 352 புள்ளிகள் அதிகரித்தது.
முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் சென்செக்ஸ் 352 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 352 புள்ளிகள் அதிகரித்தது.
கடந்த சில வர்த்தக தினங்களாக பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதன் காரணமாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது. இதனை சாதகமாகப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் போட்டி போட்டு பங்குகளில் தங்களது முதலீட்டை அதிகரித்தனர். 
உள்நாட்டு நிதி நிறுவனங்கள் சிறப்பான பங்களிப்பையடுத்து பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் நடைபெற்றது. 
புதன்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.995.11 கோடியை பங்குகளில் முதலீடு செய்திருந்த நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.1,217.92 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக தாற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்க அதிகரிப்பை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி அதன் நிதி கொள்கையில் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் எதையும் செய்யாதது சந்தையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
மோட்டார் வாகனம், தொலைத்தொடர்பு, நுகர்வோர் சாதனங்கள், மின்சாரம், பொறியியல் சாதனங்கள், எண்ணெய்-எரிவாயு, உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறை நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் தேவை அதிகமாக காணப்பட்டது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், பார்தி ஏர்டெல் பங்கின் விலை அதிகபட்ச அளவாக 6.08 சதவீதம் அதிகரித்தது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை 3 சதவீதம் வரை குறைந்து ஒரு பீப்பாய் 62 டாலருக்கும் கீழ் வர்த்தகமானதால் பொதுத் துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவன பங்குகளின் விலை 1.83 சதவீதம் வரை ஏற்றம் கண்டது.
இவைதவிர, ஏஷியன் பெயின்ட்ஸ், மாருதி சுஸýகி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, என்டிபிசி, எல் & டி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்யுஎல், பாரத ஸ்டேட் வங்கி, டாடா மோட்டார்ஸ், லூபின், அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், பவர் கிரிட் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை 3.29 சதவீதம் வரை அதிகரித்தது.
இருப்பினும், ஸன்பார்மா, விப்ரோ, சிப்லா, டிசிஎஸ், கோல் இந்தியா பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 352 புள்ளிகள் அதிகரித்து 32,949 புள்ளிகளில் நிலைத்தது. நவம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு காணப்படும் ஒரு நாள் அதிகபட்ச ஏற்றம் இதுவாகும்.
தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 122 புள்ளிகள் உயர்ந்து 10,166 புள்ளிகளாக நிலைத்தது. கடந்த மே 25ஆம் தேதிக்கு பிறகு ஏற்படும் ஒரு நாள் அதிகபட்ச ஏற்றம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com