தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.21,896}க்கு விற்பனையானது.
தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.21,896}க்கு விற்பனையானது.
உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச பொருளாதாரச் சூழல் ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.2,737}க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ .80 உயர்ந்து ரூ.21,896}க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.39.30}ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.39,300}ஆகவும் இருந்தது. 
சனிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்}ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் 2,737
1 பவுன் தங்கம் 21,896
1 கிராம் வெள்ளி 39.30
1 கிலோ வெள்ளி 39,300
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com