எல்.ஐ.சி.: புற்றுநோய் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்

எல்.ஐ.சி. நிறுவனம் புற்று நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கான பிரத்யேக காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

எல்.ஐ.சி. நிறுவனம் புற்று நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கான பிரத்யேக காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளர் ஆர். தாமோதரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
இந்தத் திட்டத்தில் காப்பீட்டுதாரர் தொடக்க நிலை அல்லது முதிர்ந்த நிலை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தால் பாலிசி விதிமுறைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட சதவீதத் தொகை வழங்கப்படும். 
புற்றுநோய் ஆரம்பகட்ட நிலையில் இருந்தால் 25 சதவீத காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மேலும், 3 ஆண்டுகளுக்கான பிரீமியமும் தள்ளுபடி செய்யப்படும். 
புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்தால் 100 சதவீதம் காப்பீட்டுத் தொகையும் திரும்ப வழங்கப்படும். மேலும், ஒரு சதவீத காப்பீட்டுத் தொகை 10 ஆண்டுகளுக்கு (காப்பீட்டுதாரர் உயிருடன் இருந்தாலும், இறந்துவிட்டாலும்) மாதந்தோறும் வழங்கப்படும். தவிர, செலுத்த வேண்டிய பிரீமிய தொகையும் தள்ளுபடி செய்யப்படும்.
இந்த பாலிசிக்கான காத்திருப்பு காலம் 180 நாட்கள் ஆகும். பாலிசி எடுப்பதற்கு முன்பு 48 மாதங்களுக்குள்ளாக புற்றுநோய் நோய் பாதிப்புக்குள்ளாகியிருந்தால் இந்த திட்டத்தில் சேர தகுதியற்றவராவார். இந்த பாலிசியை நிர்வகிக்கும் பொறுப்பு நேரடியாக எல்.ஐ.சி. நிறுவனத்தினுடையது. மூன்றாம் தரப்பு நிர்வாகத்துக்கு இங்கு இடமில்லை. 
20 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். 10 முதல் 30 ஆண்டுகள் வரை பிரீமியம் செலுத்தும் வசதி உள்ளது. ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையில் காப்பீடு செய்து கொள்ளமுடியும். ஆன்லைன் மூலம் எளிய முறையிலும் இந்தப் பாலிசியை எடுத்துப் பலன் பெறலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com