மேற்கு ஆப்பிரிக்க செயல்பாடுகளுக்கு ஐவரி கோஸ்டில் அசோக் லேலண்ட் புதிய தலைமையகம்

ஐவரி கோஸ்டில் உள்ள அபித்ஜானில், மேற்கு ஆப்பிரிக்க செயல்பாடுகளின் தலைமையகத்தை அசோக் லேலண்ட் நிறுவனம் அமைத்துள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க செயல்பாடுகளுக்கு ஐவரி கோஸ்டில் அசோக் லேலண்ட் புதிய தலைமையகம்

ஐவரி கோஸ்டில் உள்ள அபித்ஜானில், மேற்கு ஆப்பிரிக்க செயல்பாடுகளின் தலைமையகத்தை அசோக் லேலண்ட் நிறுவனம் அமைத்துள்ளது.
இதுகுறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் (சர்வதேச விற்பனை & விநியோகம்) ராஜீவ் சஹாரியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
அந்தப் பிராந்தியத்தில் இந்த தலைமையகம் மத்திய இடமாகத் திகழும். ஐவரி கோஸ்ட்டில் உள்ள எங்களின் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பிந்தைய சேவைகளை வழங்குவதில் இந்த தலைமையகத்தின் பங்களிப்பு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இதனால், எங்கள் பிராண்ட் மீதான மதிப்பும், நம்பிக்கையும் மேலும் உயரும். ஐவரி கோஸ்ட் அரசுடன் இணைந்து மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். மேற்கு ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் ஐவரி கோஸ்டை வாகன உற்பத்தி முனையமாக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
புதிதாக திறக்கப்பட்டுள்ள இம்மையத்தில், மண்டல சந்தைப்படுத்துதல் அலுவலகம், உதிரி பாக சேமிப்பு கிடங்கு, பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றிருக்கும். 
அசோக் லேலண்ட் நிறுவனம், கேப்டன், பாஸ், ஹாக் மற்றும் மிட்டர் ஆகிய நான்கு மாடல் வாகனங்களை மேற்கு ஆப்பிரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com