அடுத்த நிதி ஆண்டில் எஸ்.பி.ஐ. துணை வங்கிகள் இணைப்பு

பாரத ஸ்டேட் வங்கியுடன் (எஸ்.பி.ஐ.) அதன் துணை வங்கிகள் மற்றும் பாரதிய மஹிளா வங்கியை இணைக்கும் பணிகள் அடுத்த ஆண்டில் நிறைவடையும் என்பதை பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர்
அடுத்த நிதி ஆண்டில் எஸ்.பி.ஐ. துணை வங்கிகள் இணைப்பு

பாரத ஸ்டேட் வங்கியுடன் (எஸ்.பி.ஐ.) அதன் துணை வங்கிகள் மற்றும் பாரதிய மஹிளா வங்கியை இணைக்கும் பணிகள் அடுத்த ஆண்டில் நிறைவடையும் என்பதை பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா  சூசகமாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: பாரத ஸ்டேட் வங்கியுடன், அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் & ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் உள்ளிட்ட ஐந்து துணை வங்கிகளையும், பாரதிய மஹிளா வங்கியையும் இணைக்கும் பணிகள் அடுத்த நிதி ஆண்டுக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
தகவல் தொழில்நுட்ப அமைப்புகளில் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருப்பதால் இணைப்பு பணிகள் தாமதமாகி வருகின்றன.
இந்த நிலையில், ஆண்டுக் கணக்கு முடிப்பும் நெருங்கி வருகிறது. அந்தப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, இணைப்பு நடவடிக்கைகள் பின்னர் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com