அடுத்த நிதி ஆண்டில் கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி இலக்கு 66 கோடி டன்?

வரும் நிதி ஆண்டில் பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி இலக்கு 66 கோடி டன்னாக இருக்க வாய்ப்புள்ளது.
அடுத்த நிதி ஆண்டில் கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி இலக்கு 66 கோடி டன்?

வரும் நிதி ஆண்டில் பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி இலக்கு 66 கோடி டன்னாக இருக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோல் இந்தியா நிறுவனம், நடப்பு நிதி ஆண்டில் 59.8 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இருப்பினும், நிலம் கையகப்படுத்தல், மறுகுடியமர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் நிலக்கரி உற்பத்தி 57.5 கோடி டன்- 58.20 கோடி டன் அளவுக்கே இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
ஏப்ரல்-டிசம்பர் வரையிலான கால அளவில் 37.77 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, இலக்கு அளவான 41.75 கோடி டன்னைக் காட்டிலும் மிகவும் குறைவாகும்.
குறிப்பாக, டிசம்பர் மாதத்தில் 5.66 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையி அதன் உற்பத்தி 5.42 கோடி டன் அளவுக்கே இருந்தது.
வரும் நிதி ஆண்டில் நிலக்கரி உற்பத்தி செய்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், மத்திய அரசுக்கும், கோல் இந்தியா நிறுவனத்துக்கும் இடையே இன்னும் கையெழுத்தாகவில்லை.
எனினும், வரும் நிதி ஆண்டுக்கான கோல் இந்தியாவின் உற்பத்தி இலக்கு 66 கோடி டன்னாக இருக்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.
உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியாவின் பங்களிப்பு 80 சதவீதமாகும். வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய கோல் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com