பங்குச் சந்தையில் 50 புள்ளிகள் ஏற்றம்

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 50 புள்ளிகள் ஏற்றம் கண்டது
பங்குச் சந்தையில் 50 புள்ளிகள் ஏற்றம்

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 50 புள்ளிகள் ஏற்றம் கண்டது.
வரும் மத்திய பட்ஜெட்டில் பொதுத் துறை வங்கிகளில் ரூ. 25,000 கோடி மதிப்பிலான கூடுதல் மூலதனம் செலுத்தும் அறிவிப்பு வரும் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து, பங்குச் சந்தையில் உற்சாக நிலை காணப்பட்டது. மேலும் சில நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கை முதலீட்டாளர்கள் இடையே சாதகமான மனநிலையைத் தோற்றுவித்தது.
நிறுவனங்களுக்கான வருமான வரி விகிதம் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு விலை 1.93 சதவீதம் அதிகரித்தது. எச்.டி.எஃப்.சி. வங்கியின் பங்கு விலை 1.21 சதவீதம் அதிகரித்தது. ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகியவற்றின் பங்கு விலையும் ஏற்றம் கண்டன. டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், எச்.டி.எஃப்.சி., லூபின், ஏஷியன் பெயிண்ட்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ, சிப்லா, பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டியதில் அவற்றின் விலை உயர்வு பெற்றன.
அதே சமயத்தில் இன்போசிஸ், ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ், ஸன் ஃபார்மா, பார்தி ஏர்டெல், மஹிந்திரா, என்.டி.பி.சி., கோல் இந்தியா, ஐ.டி.சி., மாருதி சுஸýகி, விப்ரோ ஆகியவற்றின் பங்கு விலை சரிந்தன. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 27,288 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 12 புள்ளிகள் உயர்வு பெற்று நிஃப்டி குறியீடு 8,412 புள்ளிகளாக முடிவுற்றது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கும் போக்கும் காணப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 117.59 கோடி மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு முதீலீட்டாளர்கள் விற்பனை செய்ததாக மும்பை பங்குச் சந்தை தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com