125 விற்பனையகங்கள் தொடங்க பஜாஜ் திட்டம்

நாடு முழுவதும் புதிதாக 125 விற்பனையகங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகுல் பஜாஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
புதிய கேடிஎம் ரக மோட்டார் சைக்கிள்களை புணேயில் வியாழக்கிழமை அறிமுகம் செய்த பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகுல் பஜாஜ்.
புதிய கேடிஎம் ரக மோட்டார் சைக்கிள்களை புணேயில் வியாழக்கிழமை அறிமுகம் செய்த பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகுல் பஜாஜ்.

நாடு முழுவதும் புதிதாக 125 விற்பனையகங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகுல் பஜாஜ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
புணேயில் புதிய கேடிஎம் மாடல் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: ஐரோப்பாவில் முதலிடம் பிடித்துள்ள கேடிஎம் பைக்குகளை 2012-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறோம். இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளோம். கடந்த ஆண்டைக் காட்டிலும் கேடிஎம் மாடல் மோட்டார் சைக்கிள்களின் விற்பனை 46 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு மட்டுமே 37,000 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்தோம்.
இப்போது புதிய மாடலில் ஆர்சி390, ஆர்சி200 ஆகியவற்றை அறிமுகம் செய்கிறோம். இதில் ஆர்சி390யின் விற்பனையக விலை ரூ. 2.25 லட்சமாகும். ஆர்சி200 மாடலின் விலை ரூ. 1.71 லட்சமாகும். வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. சர்வதேச தர நிர்ணயம் மற்றும் பிஎஸ்-4 மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப புதிய மாடல்களை உருவாக்கியதைத் தொடர்ந்து அவற்றின் விலை அதிகரித்துள்ளது.
ஸ்போர்ட் வகை மோட்டார் சைக்கிள் சந்தையில் பஜாஜ் கேடிஎம் 30 சதவீத பங்களிப்பைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது.
தற்போது நாடு முழுவதும் கேடிஎம் பைக் விற்பனைக்கு 325 பிரத்யேக விற்பனையகங்கள் உள்ளன. வரும் 2017-2018 நிதி ஆண்டில் மேலும் 125 பிரத்யேக விற்பனையங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த கேடிஎம் நிறுவனத்தில் பஜாஜ் ஆட்டோ 49 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ளது. கேடிஎம் ரக மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் தயாரித்து, விற்பனை செய்ய இரு நிறுவனங்கள் இடையே உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.
பஜாஜ் கூட்டணியில் விற்பனையாகும் கேடிஎம் தவிர, யமஹா, ஹோண்டா, மோட்டோராட், ஹார்லி டேவிட்ஸன், சுஸுகி உள்ளிட்ட நிறுவனங்கள் ஸ்போர்ட் ரக மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com