ஆக்சிஸ் வங்கி லாபம் 73 சதவீதம் சரிவு

தனியார் துறையைச் சேர்ந்த ஆக்சிஸ் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 73 சதவீதம் சரிந்து ரூ. 580 கோடியாக உள்ளது என்று அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் வங்கி லாபம் 73 சதவீதம் சரிவு

தனியார் துறையைச் சேர்ந்த ஆக்சிஸ் வங்கியின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 73 சதவீதம் சரிந்து ரூ. 580 கோடியாக உள்ளது என்று அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வங்கியின் தலைமை நிதி அதிகாரி ஜெய்ராம் ஸ்ரீதரன் மும்பையில் செய்தியாளர்களிடம் இது குறித்து தெரிவித்ததாவது: தனியார் துறையில் ஆக்சிஸ் வங்கி நாட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நிகர அளவில் வங்கியின் வட்டி வருவாய் 4 சதவீதம் அதிகரித்து ரூ. 4,334 கோடியாக உள்ளது. வட்டியல்லாத வருவாயாக ரூ. 3,400 கோடியைப் பெற்றுள்ளோம். இது கடந்த ஆண்டைவிட 45 சதவீதம் கூடுதலாகும்.
வாராக் கடன் விவகாரத்தால் வங்கியின் மூன்றாம் காலாண்டு செயல்பாடுகள் தொய்வடைந்தன. அக்டோபர்-டிசம்பர் கால அளவில் வாராக் கடன்களின் மதிப்பு ரூ. 4,560 கோடியாக இருந்தது. இதில் ரூ. 1,600 கோடி மதிப்பிலான கடன்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ளன. சிறு வர்த்தகர்கள், சிறு மற்றும் நடுத்தர ரக தொழில்களுக்கு அளிக்கப்பட்ட கடன்களும் அழுத்தத்துக்கு உள்ளாகின. அதன் மதிப்பு ரூ. 650 கோடி. உயர் மதிப்பு கரன்சி விவகாரத்தால் இந்த பாதிப்பு நேரவில்லை. உயர் மதிப்பு கரன்சி விவகாரத்தின் பாதிப்பு அடுத்த நிதி ஆண்டில்தான் தெரிய வரும். வாராக் கடன்களை சமாளிக்க ஒதுக்கீடு செய்த தொகை ரூ. 3,795 கோடியாகும். கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிலையைவிட இது ஐந்து மடங்கு அதிகமாகும்.
மூன்றாம் காலாண்டில் நிகர லாபமாக ரூ. 580 கோடியைப் பெற்றுள்ளோம். சென்ற ஆண்டு இதே கால அளவில் ஈட்டிய நிகர லாபமான ரூ. 2,175 கோடியைவிட இது 73 சதவீத வீழ்ச்சியாகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com