எச்.டி.எஃப்.சி. லைஃப் லாபம் ரூ.645 கோடி

தனியார் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எச்.டி.எஃப்.சி. லைஃப் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மூன்று
எச்.டி.எஃப்.சி. லைஃப் லாபம் ரூ.645 கோடி

தனியார் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எச்.டி.எஃப்.சி. லைஃப் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மூன்று காலாண்டுகளில் ரூ. 645 கோடியை நிகர லாபமாக ஈட்டியதாகத் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது தொடர்பாகத் தெரிவித்திருப்பதாவது:
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-டிசம்பர் வரையிலான கால அளவில் நிறுவனத்தின் பிரீமியம் வருவாய் ரூ. 12,220 கோடியாகும். கடந்த ஆண்டு இதே கால அளவில் பெற்ற பிரீமியம் வருவாயைவிட தற்போது 20 சதவீதம் வளர்ச்சி காணப்பட்டுள்ளது. புதிய பிரீமியம் வகையிலான வருவாய் 38 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. பழைய பாலிசிகள் மூலம் பெற்ற பிரீமியம் வருவாய் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. டிசம்பர் இறுதி நிலவரப்படி, நிறுவனம் ரூ. 83,640 கோடி சொத்து நிர்வகித்து வருகிறது.
மேக்ஸ் லைஃப் காப்பீட்டு நிறுவனத்தை எச்.டி.எஃப்.சி. ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைக்கும் திட்டத்தில் இந்திய காப்பீட்டுத் துறை ஒழுங்காற்றுதல் மற்றும் மேம்பாட்டு ஆணையம் சில ஐயங்களை எழுப்பியுள்ளது.
எனினும், காப்பீட்டுத் துறைக்கான அனைத்து சட்ட - விதிமுறைகளையும் பின்பற்றியே நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்று உறுதியாகக் குறிப்பிட விரும்புகிறோம். ஆணையம் எழுப்பியுள்ள ஐயங்கள் குறித்து முறையான விளக்கங்களை அளித்துள்ளோம். ஆணையத்தின் இறுதி அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்.
ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே, தொழிற்போட்டி கண்காணிப்பு ஆணையம், செபி, பங்குச் சந்தைகள், தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயம் ஆகியவற்றின் ஒப்புதலைப் பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று எச்.டி.எஃப்.சி. லைஃப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com