பி.எஸ்.இ. பொதுப் பங்கு வெளியீட்டுக்கு அமோக வரவேற்பு

பி.எஸ்.இ. (மும்பை பங்குச் சந்தை) பொதுப் பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பு காணப்பட்டது.
பி.எஸ்.இ. பொதுப் பங்கு வெளியீட்டுக்கு அமோக வரவேற்பு

பி.எஸ்.இ. (மும்பை பங்குச் சந்தை) பொதுப் பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பு காணப்பட்டது.
மும்பை பங்கு சந்தை, வணிக நடவடிக்கைகளுக்குத் தேவையான ரூ.1,243 கோடியை பொதுப் பங்கு வெளியீட்டின் மூலம் திரட்ட முடிவு செய்தது. அதன்படி, பங்கு ஒன்றை ரூ.805-ரூ.806 விலையில் விற்பனை செய்து இந்த தொகையைத் திரட்ட திட்டமிட்டது.
பி.எஸ்.இ. பொதுப் பங்கு வெளியீடு சென்ற திங்கள்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமையும் பி.எஸ்.இ. பொதுப் பங்கு வெளியீட்டுக்கு முதலீட்டாளர்களிடையே அமோக வரவேற்பு காணப்பட்டது.
மொத்தம் 1,07,99,039 பங்குகள் விற்பனை செய்யப்படவிருந்த நிலையில், முதலீட்டாளர்களிடமிருந்து 1,08,89,568 பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்தது.
மும்பை பங்குச் சந்தையின் பொதுப் பங்கு வெளியீடு புதன்கிழமை நிறைவடைய உள்ளது.
நடப்பு ஆண்டில் பொதுப் பங்கு வெளியீட்டில் இறங்கிய முதல் நிறுவனம் என்ற பெருமையை மும்பை பங்குச் சந்தை பெற்றுள்ளது. செபி விதிமுறைப்படி இதன் பங்குகளை மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிட முடியாது. தேசிய பங்குச் சந்தையில் இதன் பங்குகள் பட்டியலிடப்படும்.
மும்பை பங்குச் சந்தை பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்க செபி கடந்த டிசம்பர் மாதம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில், தேசிய பங்குச் சந்தையும் பொதுப் பங்கு வெளியீட்டில் களமிறங்கி ரூ.10,000 கோடி திரட்ட கடந்த மாதம் செபியில் விண்ணப்பித்தது.
அதிக அளவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் அடிப்படையில் மும்பை பங்குச் சந்தை உலகின் மிகப்பெரிய சந்தையாகும்.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,11,56,778 கோடி. சந்தை மதிப்பில் சர்வதேச அளவில் 10-ஆவது இடத்தில் உள்ளது மும்பை பங்குச் சந்தை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com