ஐ.டி.சி. லாபம் 5.7% அதிகரிப்பு

பல்வேறுபட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஐ.டி.சி. நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 5.71 சதவீதம் அதிகரித்தது.
ஐ.டி.சி. லாபம் 5.7% அதிகரிப்பு

பல்வேறுபட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஐ.டி.சி. நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 5.71 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் வருவாய் ரூ.13,569.97 கோடியாக இருந்தது. கடந்த 2015-16 நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.12,961.85 கோடியுடன் ஒப்பிடும்போது இது 4.69 சதவீத வளர்ச்சியாகும்.
நிகர லாபம் ரூ.2,503.76 கோடியிலிருந்து 5.71 சதவீதம் அதிகரித்து ரூ.2,646.73 கோடியாக காணப்பட்டது.
வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள்கள் விற்பனையின் வாயிலாக கிடைத்த வருவாய் 2.51 சதவீதம் அதிகரித்து ரூ.10,857.23 கோடியாக இருந்தது. குறிப்பாக, சிகரெட் விற்பனை மூலமாக கிடைத்த வருவாய் ரூ.8,106.31 கோடியிலிருந்து 2.24 சதவீதம் மட்டுமே உயர்ந்து ரூ.8,287.97 கோடியாக இருந்தது.
அதேபோன்று, இதர நுகர்பொருள் விற்பனையின் மூலம் கிடைத்த வருவாய் 3.39 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்து ரூ.2,569.26 கோடியாக காணப்பட்டது.
ஹோட்டல் வர்த்தகத்தின் வாயிலாக கிடைத்த வருவாய் ரூ.345.29 கோடியிலிருந்து 7.30 சதவீதம் அதிகரித்து ரூ.370.51 கோடியாக இருந்தது.
வேளாண் வர்த்தகத்தின் மூலமாக கிடைத்த வருவாய் ரூ.1,480.99 கோடியிலிருந்து 12.89 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.1,671.92 கோடியாக காணப்பட்டது.
அதேசமயம், காகிதம் மற்றும் பேக்கேஜிங் வர்த்தகத்தின் மூலமாக பெறப்பட்ட வருவாய் ரூ.1,337.67 கோடியிலிருந்து குறைந்து ரூ.1335.82 கோடியாக இருந்தது என்று ஐ.டி.சி. அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐ.டி.சி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் முழு நேர இயக்குநர் பொறுப்புக்கு சஞ்சீவ் பூரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் பொறுப்பேற்பார்.
மேலும், ஐ.டி.சி. நிறுவனம் மருத்துவ துறையிலும் களமிறங்க முடிவு செய்துள்ளது. பங்குதாரர்களிடம் அதற்கான ஒப்புதலைப் பெற நிர்வாகக் குழு பரிந்துரை செய்துள்ளதாக மும்பை பங்குச் சந்தைக்கு அளித்த மற்றொரு அறிக்கையில் ஐ.டி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com