விரிவாக்கத் திட்டங்களில் ரூ.61,000 கோடி முதலீடு: எச்பிசிஎல்

அடுத்த நான்கு ஆண்டுகளில் விரிவாக்கத் திட்டங்களில் ரூ.61,000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக எச்பிசிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த நான்கு ஆண்டுகளில் விரிவாக்கத் திட்டங்களில் ரூ.61,000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக எச்பிசிஎல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்தது:
தற்போதுள்ள சுத்திகரிப்புத் திறனை புதிய எரிபொருள் தரக்கட்டுப்பாடு விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தவும், விரிவாக்கம் செய்யவும் எச்பிசிஎல் நிறுவனம் தீவிரமாக திட்டமிட்டுள்ளது. இதற்காக, வரும் 2021-ஆம் ஆண்டுக்குள் மொத்தம் ரூ.61,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.
அதில், விசாகப்பட்டினம் ஆலையின் சுத்திகரிப்புத் திறனை அதிகரிப்பதற்காக மட்டும் ரூ.20,928 கோடி முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது 83.30 லட்சம் டன்னாக உள்ள அந்த ஆலையின் சுத்திகரிப்பு திறன் வரும் 2020-ஆம் ஆண்டில் 1.5 கோடி டன்னாக உயரும்.
மும்பையில் ஆலையின் சுத்திகரிப்பு திறனை தற்போதைய 75 லட்சம் டன்னிலிருந்து 95 லட்சம் டன்னாக உயர்த்தும் வகையில் ரூ.4,199 கோடி முதலீடு மேற்கொள்ளப்படும்.
முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள மொத்த தொகையில், ரூ.23,400 கோடி சுத்திகரிப்பு திட்டங்களுக்காகவும், ரூ. 23,600 கோடி சந்தைப்படுத்துதல், அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்காகவும், ரூ.13,000 கோடி கூட்டுத் திட்டங்களை நிறைவேற்றவும் பயன்படுத்திக் கொள்ளப்படும் என்று எச்பிசிஎல் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com