சுந்தரம் பைனான்ஸ் லாபம் ரூ.117 கோடி

வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.117 கோடி லாபம் ஈட்டியது.

வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.117 கோடி லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.டி. ஸ்ரீநிவாஸராகவன் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
கார், டிராக்டர் மற்றும் கட்டுமான உபகரணப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட கடன்களின் வளர்ச்சி வலுவான அளவில் அதிகரித்துள்ளது.
ஜூன் மாத்துடன் முடிவடைந்த நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வழங்கப்பட்ட கடன் ரூ.3,217 கோடியிலிருந்து 6 சதவீதம் அதிகரித்து ரூ.3,420 கோடியானது.
நிகர லாபம் ரூ.90.17 கோடியிலிருந்து 30 சதவீதம் உயர்ந்து ரூ.117 கோடியாக இருந்தது.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 16 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.24,331 கோடியை எட்டியது.
மொத்த வாராக் கடன் விகிதம் 2.15 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 1 சதவீதத்திலிருந்து 0.93 சதவீதமாகவும் குறைந்தது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com