குறைந்த விலை ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக கவனம்: மோட்டோரோலா

இந்தியாவில் குறைந்த விலையுடைய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக மோட்டோரோலா தெரிவித்துள்ளது.
குறைந்த விலை ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக கவனம்: மோட்டோரோலா

இந்தியாவில் குறைந்த விலையுடைய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக மோட்டோரோலா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மோட்டோரோலா மொபிலிட்டி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுதின் மாத்தூர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 100-150 டாலர் (சுமார் ரூ.6,000-ரூ.10,000) பிரிவில் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா ஸ்மார்ட்போன் சந்தை உள்ளது. கடந்த நான்கு காலாண்டுகளில் மட்டும் இப்பிரிவில் 3.5 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன.
குறைந்த விலை ஸ்மார்ட் போன் சந்தை இந்தியாவில் ஆண்டுக்காண்டு 25 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது.
இப்பிரிவிலான ஸ்மார்ட்போன் சந்தையில் ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. அதனை உணர்ந்து குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போன் தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தவுள்ளோம். குறைந்த விலை ஸ்மார்ட்போன்களில் 85 சதவீத விற்பனை ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது என்றார் அவர்.
'மோட்டோ சி ப்ளஸ்' அறிமுகம்: மோட்டோரோலா நிறுவனம் 'மோட்டோ சி ப்ளஸ்' என்ற புதிய வகை ஸ்மார்ட்போனை புதுதில்லியில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. இதன் விலை ரூ.6,999. நூகா ஆன்ட்ராய்டு தளத்தில் செயல்படும் இந்த ஸ்மார்ட்போனில் 5-அங்குல தொடுதிரை, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ப்ராசஸர், 2ஜிபி ரேம், 16ஜிபி உள்நினைவக திறன், 8எம்பி பின்பக்க கேமரா, 2எம்பி முன்பக்க கேமரா, 4,000எம்ஏஹெச் ரிமூவல் பேட்டரி ஆகிய வசதிகள் உள்ளன. ஜூன் 20-ஆம் தேதி முதல் பிரத்யேகமாக ஃபிளிப்கார்ட் வலைதளத்தின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படவுள்ளதாக மோட்டோரோலா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com