ஹிந்துஸ்தான் கோககோலா: 4,000 விநியோகஸ்தர்களுக்கு ஜிஎஸ்டி பயிற்சி

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் கோககோலா குளிர்பான நிறுவனம் 4,000 விநியோகஸ்தர்களுக்கு ஜிஎஸ்டி தொடர்பான பயிற்சிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் கோககோலா: 4,000 விநியோகஸ்தர்களுக்கு ஜிஎஸ்டி பயிற்சி

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் கோககோலா குளிர்பான நிறுவனம் 4,000 விநியோகஸ்தர்களுக்கு ஜிஎஸ்டி தொடர்பான பயிற்சிகளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வரும் ஜூலை 1}ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வரவுள்ள நிலையில் இந்த திட்டத்தை அந் நிறுவனம் மேற்கொள்கிறது.

ஹிந்துஸ்தான் கோககோலா இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:
நிறுவனத்தின் 100 பயிற்சியாளர்கள், தலா மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள எங்களின் 4,000 விநியோகஸ்தர்களுக்கு ஜிஎஸ்டி தொடர்பான அனைத்துப் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக, குளிர்பான பிரிவுகளுக்கான ஜிஎஸ்டி விகிதம், அதன் அமைப்பு, ஜிஎஸ்டி விதிமுறை உள்ளிட்ட பல பிரிவுகளில் அவர்கள் பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
கடந்த 25}ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி முகாமில் விநியோகஸ்தர்களுக்கு அவரவர் உள்ளூர் மொழிகளிலேயே பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள எங்களின் வர்த்தக பங்குதாரர்களுக்கு ஏற்கெனவே பயிற்சி வழங்கப்பட்டு விட்டது. எங்களின் 4,000 விநியோகஸ்தர்களுக்கும் வரும் ஜூன் 29}ஆம் தேதிக்குள் வழங்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர, விநியோகஸ்தர்களுக்கு ஜிஎஸ்டி தொடர்பான விளக்கங்களையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்த நிறுவனத்தின் சார்பில் ஜிஎஸ்டி ஹெல்ப்லலைனும் அமைக்கப்பட்டுள்ளது என்று ஹிந்துஸ்தான் கோககோலா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com