2020 க்குள் உலகின் மிகப்பெரிய ஒயின் சந்தை பட்டியலில் இரண்டாமிடம் சீனாவுக்கு!

சீனாவில் ஒயின் அருந்துவோர் மற்றும் பிற நாடுகளுக்கு ஒயின் ஏற்றுமதி செய்வோர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
2020 க்குள் உலகின் மிகப்பெரிய ஒயின் சந்தை பட்டியலில் இரண்டாமிடம் சீனாவுக்கு!

தற்போது உலக ஒயின் சந்தையில் சீனா 4 ஆம் இடம் வகித்து வருகிறது. சீனாவில் ஒயின் அருந்துவோர் மற்றும் பிற நாடுகளுக்கு ஒயின் ஏற்றுமதி செய்வோர் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு சீனாவில் உள்நாட்டு, வெளிநாட்டு ஒயின் விற்பனை 21 பில்லியன் டாலர்களைக் கடந்து சென்று கொண்டிருப்பதால் கூடிய விரைவில் உலக ஒயின் சந்தையில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்பதோடு உற்பத்தி மற்றும் விற்பனையிலும் சீனா பிரிட்டன் மற்றும் ஃப்ரான்ஸைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை வெகு எளிதில் கைப்பற்றவும் வாய்ப்பிருப்பதாக வின் எக்ஸ்போ எனும் ஒயின் தொழிற்சாலை கண்காட்சியொன்று தனது கண்காட்சியின் இறுதியில் தெரிவித்தது.

சீனா உலகச் சந்தையில் இரண்டாம் இடத்தை அடைய வேண்டுமானால் அது இனி வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு 39.8% வளர்ச்சியைத் தொடர்ந்து தக்க வைக்க வேண்டும். என வின் எக்ஸ்போ நிறுவனத்தின் செயல் இயக்குனர் குல்லாமா டெக்லிஸ் தெரிவித்துள்ளார்.

உலக ஒயின் சந்தையில் தொடர்ந்து தனது முதலிடத்தை தக்க வைத்திருக்கும் நாடு எது தெரியுமா? அது அமெரிக்கா என்று நீங்கள் சொன்னால் பதில் சரியானதே. கடந்த வருடத்தை விட 11.9 % அதிகமான வளர்ச்சி விகிதத்துடன் தொடர்ந்து உலக ஒயின் சந்தைப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது அமெரிக்கா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com