ரூ.300 கோடி மூலதனம் திரட்டுகிறது மகாராஷ்டிரா வங்கி

பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிரா வங்கி, விருப்புரிமைப் பங்கு ஒதுக்கீட்டின் மூலம் ரூ.300 கோடி மூலதனம் திரட்டுகிறது.

பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிரா வங்கி, விருப்புரிமைப் பங்கு ஒதுக்கீட்டின் மூலம் ரூ.300 கோடி மூலதனம் திரட்டுகிறது.
இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:மகாராஷ்டிரா வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில், மத்திய அரசுக்கு விருப்புரிமை அடிப்படையில் பங்குகளை ஒதுக்கீடு செய்து ரூ.300 கோடி மூலதனம் திரட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒதுக்கப்படும் பங்குகளுக்கான வெளியீட்டு விலை ஏப்ரல் 3-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று மகாராஷ்டிரா வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புணேயை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மகாராஷ்டிரா வங்கி, பங்குகளை ஒதுக்கீடு செய்து ரூ.300 கோடி மூலதனம் பெறுவது தொடர்பான திட்டம் குறித்த மத்திய அரசின் கடிதத்தை மார்ச் 16-ஆம் தேதி பெற்றது. இதையடுத்து, இந்தத் திட்டத்துக்கு அந்த வங்கி ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com