பாரத ஸ்டேட் வங்கியின் லாபம் ரூ.2,814 கோடி

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி நான்காம் காலாண்டில் ரூ.2,814.82 கோடி லாபம் ஈட்டியது.
பாரத ஸ்டேட் வங்கியின் லாபம் ரூ.2,814 கோடி

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி நான்காம் காலாண்டில் ரூ.2,814.82 கோடி லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சென்ற நிதி ஆண்டின் ஜனவரி-மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் மொத்த வட்டி வருவாய் ரூ.47,393 கோடியாக இருந்தது. 2015-16 நிதி ஆண்டில் இதே கால அளவில் ஈட்டிய வருவாயான ரூ.42,942 கோடியுடன் ஒப்பிடும்போது இது 10.36% அதிகமாகும்.
நிகர வட்டி வருவாய் ரூ.15,401 கோடியிலிருந்து 17.33% அதிகரித்து ரூ.18,071 கோடியானது. செயல்பாட்டு லாபம் 12.93% உயர்ந்து ரூ.16,026 கோடியானது.
நிகர லாபம் ரூ.1,263.81 கோடியிலிருந்து இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.2,814.82 கோடியானது.
சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.12,224.59 கோடியிலிருந்து 98% வீழ்ச்சியடைந்து ரூ.241.23 கோடியாக காணப்பட்டது.
பாரத ஸ்டேட் வங்கி குழுமத்தின் மொத்த வாராக் கடன் விகிதம் 6.4 சதவீதத்திலிருந்து அதிகரித்து 9.04 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் விகிதம் 3.73 சதவீதத்திலிருந்து உயர்ந்து 5.15 சதவீதமாகவும் காணப்பட்டது.
பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மஹிளா வங்கி இணைப்பு ஏப்ரல் 1-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதனால், நான்காம் காலாண்டு நிதி நிலை அறிவிப்பில் அந்த வங்கிகள் கணக்கில் கொள்ளப்படவில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com