'முருகப்பா குழுமத்தின் ஏற்றுமதி வருவாய் 5 சதவீதம் அதிகரிக்கும்'

முருகப்பா குழுமத்தின் ஏற்றுமதி வருவாய் அடுத்த நிதியாண்டில் 5% அதிகரிக்கும் என்று அக்குழுமத்தின் செயல் தலைவர் ஏ.வெள்ளையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முருகப்பா குழுமத்தின் நிதியறிக்கையை சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுப் பேசும் குழுமத்தின் தலைவர் ஏ.வெள்ளையன். உடன், நிதிப் பிரிவு இயக்குநர் என்.ஸ்ரீநிவாசன்.
முருகப்பா குழுமத்தின் நிதியறிக்கையை சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுப் பேசும் குழுமத்தின் தலைவர் ஏ.வெள்ளையன். உடன், நிதிப் பிரிவு இயக்குநர் என்.ஸ்ரீநிவாசன்.

முருகப்பா குழுமத்தின் ஏற்றுமதி வருவாய் அடுத்த நிதியாண்டில் 5% அதிகரிக்கும் என்று அக்குழுமத்தின் செயல் தலைவர் ஏ.வெள்ளையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முருகப்பா குழுமத்தின் 2016-17-ஆம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கை சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டு டப்பட்டது. இதை அந்த நிறுவனத்தின் தலைவர் ஏ.வெள்ளையன் வெளியிட்டுக் கூறியதாவது:
2016-17 நிதியாண்டில் முருகப்பா குழுமத்துக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது. 2016-17-ஆம் ஆண்டு நிதியாண்டில் குழுமத்தின் ஒட்டுமொத்த விற்றுமுதல் ரூ.30,023 கோடியாகும். இது கடந்தாண்டில் ரூ. 29,395 கோடியாக இருந்தது. வட்டி வரிக்கு முந்தைய வருவாய் 34% அதிகரித்து, ரூ.4,065 கோடியாக உள்ளது. இது கடந்தாண்டு ரூ.3,032 கோடியாக இருந்தது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.1,873 கோடியிலிருந்து 59% அதிகரித்து ரூ.2,973 கோடியை எட்டியது.
பங்குச் சந்தையில் பட்டியிடலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத குழும நிறுவனங்களின் சந்தை முதலீடு 43% அதிகரித்து 800 கோடி டாலராக (சுமார் ரூ.52,800 கோடி) உள்ளது. இது 2016-ஆம் ஆண்டு மார்ச்சில் 560 கோடி டாலராக (சுமார் ரூ.37,000 கோடி) இருந்தது.
டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் (டி.ஐ.ஐ.) நவீனத் தொழில் நுட்பங்களுடன் கூடிய சைக்கிள் உற்பத்திக் கூடத்தை பஞ்சாப் மாநிலம் ராஜ்புராவில் ரூ.105 கோடி செலவில் அமைத்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் தேவைக்கு ஈடு கொடுக்க இது பயன்படும். குழும நிறுவனங்களின் உற்பத்திப் பிரிவுகளை நவீனமயமாக்குதல், விரிவாக்கம் ஆகியவற்றுக்கு கடந்த ஆண்டு ரூ.398 கோடி முதலீட்டில் செலவுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிகழாண்டில் தொழில் வளர்ச்சி நன்றாக அமையும். பருவ மழை பற்றிய முன்னறிவிப்பு, அரசின் தொழில் கொள்கை ஆகியவை இதற்கு முக்கிய காரணம். 2015-16-ஆம் ஆண்டில் ஏற்றுமதி வருவாய் ரூ.2,700 கோடியாக இருந்தது. 2016-17-ஆம் நிதியாண்டில் ரூ.3400 கோடியாக அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏற்றுமதி வருவாய் 5% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷியாவில் சிலிகான் கார்பைடு உரம் தயாரிப்புத் தொழிலில் 15 சதவீதம் மூலதனம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில துறைகளின் வர்த்தகம் குறைவாகவே உள்ளது. ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகத்தில் வர்த்தகத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ஏ.வெள்ளையன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com