வர்த்தகம் புரிவதை எளிதாக்க 7,000 நடவடிக்கைகள்!

தொழில் தொடங்குவதை எளிதாக்க இதுவரையில், சிறியது, பெரியது என சுமார் 7,000 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்கிறார் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தொழில் தொடங்குவதை எளிதாக்க இதுவரையில், சிறியது, பெரியது என சுமார் 7,000 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்கிறார் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
வர்த்தக சூழலை மேம்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து வர்த்தகத் துறை தீவிரமாக செயலாற்றி வருகிறது.
தொழில் தொடங்குவதற்கான விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலவரையறைக்குள் பரிசீலித்து அனுமதி அளிப்பது, பாதுகாப்பு தளவாட தயாரிப்புகளுக்கான அனுமதியில் தளர்வு, இணையதள வர்த்தக திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் ஒப்புதல், ஏற்றுமதி-இறக்குமதிக்கு ஏராளமான ஆவணங்களை சார்ந்திருந்த நிலை மாற்றப்பட்டது, வரவு-செலவு கணக்குகளை ஒரேமாதிரியான படிவத்தில் ஆன்-லைனில் எளிதாக தாக்கல் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது என பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்கிறார் நிர்மலா சீதாராமன்.
ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், உலக வங்கியின் நடப்பாண்டு அறிக்கையின்படி எளிதாக தொழில்தொடங்கும் பட்டியலில் இந்தியா 130-ஆவது இடத்தில்தான் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com