பேமன்ட் வங்கி தொடங்கியது பேடிஎம்: 50 கோடி வாடிக்கையாளர்களை ஈர்க்க இலக்கு

மின்னணு பணப்பரிமாற்ற சேவையில் ஈடுபட்டு வந்த பேடிஎம் நிறுவனம் பேமன்ட் வங்கி சேவையை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பேமன்ட் வங்கி தொடங்கியது பேடிஎம்: 50 கோடி வாடிக்கையாளர்களை ஈர்க்க இலக்கு

மின்னணு பணப்பரிமாற்ற சேவையில் ஈடுபட்டு வந்த பேடிஎம் நிறுவனம் பேமன்ட் வங்கி சேவையை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி வாடிக்கையாளர்களை ஈர்க்கவுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.
இதுகுறித்து பேடிஎம் பேமன்ட் வங்கியின் தலைவர் விஜய் சேகர் சர்மா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வாடிக்கையாளர்களுக்குப் புதிய வழிமுறையில் வங்கிச் சேவையாற்ற ரிசர்வ் வங்கி, சிறப்பானதொரு சந்தர்ப்பத்தை எங்களுக்குத் தந்துள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகள் பாதுகாப்பான அரசு கடன்பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சிக்கு அது உதவியாக இருக்கும். ஒருபோதும் டெபாசிட்டுகள் ஆபத்தான சொத்துக்களாக மாற்றப்படாது.
பேடிஎம் நிறுவனத்தின் மின்னணு பணப்பை (டிஜிட்டல் வாலட்) சேவையில் தற்போது 22 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரது கணக்குகளும் பேமன்ட் வங்கிக்கு மாற்றப்படும். கணக்கு தொடங்குவதற்கு 'உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி)' படிவத்தை அவர்கள் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
இந்திய வாடிக்கையாளர்களின் மிக நம்பகமான மற்றும் நட்புறவு கொண்ட வங்கியாகத் திகழ வேண்டும் என்பது எங்களின் இலக்கு. இதன் மூலம், 2020-ஆம் ஆண்டுக்குள் 50 கோடி வாடிக்கையளர்களை ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் பேடிஎம் வங்கி கிளைகளின் விரிவாக்கத்துக்காக ரூ.400 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.
ரூ.25,000 வரை டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.250 கேஷ் பேக் சலுகை அளிக்கப்படும்.
இவை தவிர, ஜீரோ பேலன்ஸ் வசதி, கட்டணமில்லா ஆன்லைன் பணப்பரிமாற்றங்கள் (ஐ.எம்.பி.எஸ்., என்.இ.எஃப்.டி., ஆர்.டி.ஜி.எஸ். உள்ளிட்டவை), சேமிப்பு கணக்குக்கு 4% வட்டி, ரூபே டெபிட் கார்டு, வணிகர்களுக்கு நடப்புக் கணக்கு வசதி ஆகியவையும் உண்டு.
முதல் ஆண்டில் 31 கிளைகள் மற்றும் 3,000 வாடிக்கையாளர் சேவை முனையங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com