இந்தியா சிமென்ட்ஸ் நிகர லாபம் ரூ.23.67 கோடியாக சரிவு

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் 2-ஆவது காலாண்டில் ரூ.23.67 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. 


இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் 2-ஆவது காலாண்டில் ரூ.23.67 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. 
இது தொடர்பாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன் கூறியது: 
செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,274.90 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.1,314.44 கோடியாக காணப்பட்டது. இதையடுத்து, நிகர லாபம் ரூ.62.41 கோடியிலிருந்து சரிந்து ரூ.23.67 கோடியானது. சிமென்ட், கிளிங்கர் ஆகியவற்றின் விற்பனை மற்றும் ஏற்றுமதி 27.01 லட்சம் டன் ஆகும். முதல் அரையாண்டில் பெட்கோக் 81 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெட்கோக்கின் விலை உயர்வால் மின்சாரம் மற்றும் எரிபொருள்களுக்கான செலவு அதிகரித்தது. ஆற்றுமணல் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள அபரிமிதமான விலை உயர்வு தமிழகத்தில் சிமென்ட் உற்பத்தியை வெகுவாக பாதித்துள்ளது. தென்னிந்திய அளவில் சிமென்ட் உற்பத்திக்கான மொத்த கொள்திறனில் குறைந்த அளவே உற்பத்தி செய்ய முடிந்தது. 
அண்மையில் அறிவிக்கப்பட்ட மிகப் பெரிய சாலை அமைக்கும் திட்டத்தின்படி 34,800 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. இது பொருளாதாரத்துக்கு எழுச்சியூட்டுவதுடன் வருங்காலங்களில் சிமென்ட் நுகர்வும் மேம்படும். இதன் மூலம் கட்டுமானத்துறை வளர்ச்சியடையும் சூழல் ஏற்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com