"சீன டயர்கள் இறக்குமதி குறையத் தொடங்கியது'

மத்திய அரசின் நடவடிக்கைகளால் சீன டயர்களின் இறக்குமதி கணிசமான அளவு சரியத் தொடங்கியுள்ளது என மோட்டார் வாகன டயர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கைகளால் சீன டயர்களின் இறக்குமதி கணிசமான அளவு சரியத் தொடங்கியுள்ளது என மோட்டார் வாகன டயர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் சதீஷ் சர்மா செய்தியாளர்களிடம் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
சீன டயர்கள் இறக்குமதி தற்போது பாதிக்கும் கீழாக சரிவைக் கண்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்ட உயர்மதிப்பு கரன்ஸி வாபஸ் நடவடிக்கையின்போது சீன டயர்களின் இறக்குமதி 20 சதவீத அளவுக்கு குறைந்திருந்தது. இந்த நிலையில், சரக்கு-சேவை வரி அமல் மற்றும் பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளின் காரணமாக அதன் இறக்குமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் 1,50,000 டயர்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 50,000ஆக சரிவடைந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
மேலும், லாப வரம்பு சரிவடைவதன் காரணமாக எங்களது முகவர்களும் சீன டயர்களை கொள்முதல் செய்வதில்லை என்பதில் மிகவும் உறுதியாக உள்ளனர். இதுவும், இறக்குமதி சரிவுக்கு வழிகோலியுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com