சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை ஆய்வு வெளியாகவிருப்பதையொட்டி சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மத்திய அரசு மாற்றம் எதையும் மேற்கொள்ளவில்லை. 
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை ஆய்வு வெளியாகவிருப்பதையொட்டி சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மத்திய அரசு மாற்றம் எதையும் மேற்கொள்ளவில்லை. 
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நடப்பு 2017-18 நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டுக்கு பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றம் எதுவுமின்றி பழைய நிலையே தொடரும். 
அதன்படி, பி.பி.எப். எனப்படும் பொது சேமநல நிதி திட்டத்துக்கான ஆண்டு வட்டி விகிதம் 7.8 சதவீதமாகவும், 115 மாத முதிர்வு காலத்தைக் கொண்ட கிஸான் விகாஸ் பத்திர முதலீட்டுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாகவும் தொடர்ந்து நீடிக்கும். பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ருதி எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான ஆண்டு வட்டி விகிதம் 8.3 சதவீதமாகவும், அதேபோன்று மூத்த குடிமக்களுக்கான 5 }ஆண்டு கால சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதமும் 8.3 சதவீதமாகவே இருக்கும். மூத்த குடிமக்கள் திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி பலன்கள் அளிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவையடுத்து, வங்கிகளும் டெபாசிட்டுகளுக்கான வட்டியை குறைக்க வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com