ஜாகுவர் லேண்ட்ரோவர் கார் விற்பனை 6.6% அதிகரிப்பு

டாடா மோட்டார்ஸுக்கு சொந்தமான ஜாகுவர் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) கார் விற்பனை சென்ற செப்டம்பரில் 6.6 சதவீதம் வளர்ச்சி கண்டது.
ஜாகுவர் லேண்ட்ரோவர் கார் விற்பனை 6.6% அதிகரிப்பு

டாடா மோட்டார்ஸுக்கு சொந்தமான ஜாகுவர் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) கார் விற்பனை சென்ற செப்டம்பரில் 6.6 சதவீதம் வளர்ச்சி கண்டது.
இதுகுறித்து ஜேஎல்ஆர் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு ஆண்டு செப்டம்பரில் 65,097 ஜாகுவர் லேண்ட் ரோவர் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டு இதே கால அளவில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 6.6 சதவீதம் அதிகமாகும்.
எஃப்-பேஸ், அகலமான சக்கரங்களையுடைய எக்ஸ்எஃப்எல் மாடல்களின் விற்பனை சீனாவில் விறுவிறுப்படைந்ததையடுத்து ஜாகுவர் பிராண்ட் கார்களின் விற்பனை சென்ற செப்டம்பரில் 3.9 சதவீதம் அதிகரித்து 18,336-ஆனது. 
வாடிக்கையாளர்கள் மத்தியில் வேலர் மாடல் கார்களுக்கு மவுசு அதிகரித்ததையடுத்து லேண்ட் ரோவர் கார் விற்பனை 7.7 சதவீதம் அதிகரித்து 46,761-ஆனது. சமீபத்திய அறிமுகங்களான ரேஞ்ச் ரோவர் பிரிவில் வேலர், ஜாகுவர் எக்ஸ்எஃப் ஸ்போர்ட்பிரேக், வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு பெருகியுள்ளது.
சீனா, வட அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் ஜேஎல்ஆர் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. அதேசமயம், பிரிட்டனில் விற்பனை சரிந்துள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com