தங்கத்தின் விலை ரூ.23 ஆயிரத்தை எட்டியது

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் திங்கள்கிழமை ரூ.23 ஆயிரத்தை எட்டியது. ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.232 உயர்ந்து, ரூ.23,048}க்கு விற்பனையானது.
தங்கத்தின் விலை ரூ.23 ஆயிரத்தை எட்டியது

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் திங்கள்கிழமை ரூ.23 ஆயிரத்தை எட்டியது. ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ரூ.232 உயர்ந்து, ரூ.23,048}க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி, ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.29 அதிகரித்து, ரூ.2,881}க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயர்ந்து 44 ரூபாய் 10 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 அதிகரித்து ரூ.44,100 ஆகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com