வடகொரியா ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனை எதிரொலி: தங்கம் விலை கிடுகிடு உயர்வு

வடகொரியாவின் ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையின் எதிரொலியாக தங்கம் விலை திங்கள்கிழமை கிடுகிடுவென உயர்ந்தது.
வடகொரியா ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனை எதிரொலி: தங்கம் விலை கிடுகிடு உயர்வு

வடகொரியாவின் ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையின் எதிரொலியாக தங்கம் விலை திங்கள்கிழமை கிடுகிடுவென உயர்ந்தது.

பல நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வட கொரியா மிகவும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையை அண்மையில் நிகழ்த்தியது. இது உலக நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உள்ளூர் ஆபரண வியாபாரிகளும் தங்கத்தை அதிக அளவில் கொள்முதல் செய்தனர். இது போன்ற காரணங்களால், 10 கிராம் தங்கத்தின் விலை திங்கள்கிழமை ரூ.200 அதிகரித்து ரூ.30,600-க்கு வர்த்தகமானது. நடப்பு ஆண்டில் தங்கத்தின் விலை இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறை. கடந்த இரண்டு நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.350 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், 8 கிராம் எடையுள்ள ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை எவ்வித மாற்றமுமின்றி ரூ.24,600 என்ற அளவிலேயே காணப்பட்டது.
இது தவிர, தொழிற்சாலைகள், நாணய தயாரிப்பாளர்கள் தேவை அதிகரிப்பால் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.200 அதிகரித்து ரூ.41,700ஐ தொட்டது. மேலும், 100 வெள்ளி நாணயங்களின் வாங்கும் விலை ரூ.74,000-ஆகவும், விற்கும் விலை ரூ.75,000-ஆகவும் இருந்தது.
விலை உயர்வு குறித்து வர்த்தகர்கள் கூறுகையில், வட கொரியாவின் நடவடிக்கையை அடுத்து உலக அளவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தாலும், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாக கருதியதாலும் அதன் விலை 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்றனர். உள்ளூர் மட்டுமின்றி, சிங்கப்பூர் சந்தையிலும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.71 சதவீதம் உயர்ந்து 1,333.80 டாலராக காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com