ஹார்லி டேவிட்ஸன் ரூ.2.50 லட்சம் வரை விலை குறைப்பு

ஹார்லி டேவிட்ஸன் இந்தியா நிறுவனம் இரண்டு மாடல் பைக்குகளுக்கான விலையை ரூ.2.50 லட்சம் வரையில் குறைப்பதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
ஹார்லி டேவிட்ஸன் ரூ.2.50 லட்சம் வரை விலை குறைப்பு

ஹார்லி டேவிட்ஸன் இந்தியா நிறுவனம் இரண்டு மாடல் பைக்குகளுக்கான விலையை ரூ.2.50 லட்சம் வரையில் குறைப்பதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஹார்லி டேவிட்ஸனின் ஃபேட் பாய் மாடலின் விலை 
ரூ. 17,01,000-லிருந்து ரூ. 2,01,010 குறைக்கப்பட்டு தற்போது ரூ.14,99,990-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
அதேபோன்று, ஹெரிடேஜ் ஸாப்ட்டெய்ல் கிளாஸிக் மாடலின் விலையும் ரூ.18,50,000-லிருந்து ரூ.2,50,010 குறைக்கப்பட்டு தற்போது ரூ.15,99,990-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைக் குறைப்பு 2017-ஆம் ஆண்டு மாடல்களுக்கு மட்டும் பொருந்தும். மேலும், செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கிய இந்த விலைக் குறைப்பு சலுகையை வாடிக்கையாளர்கள் அந்த மாடல் பைக்குகள் கையிருப்பில் உள்ளவரை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று ஹார்லி டேவிட்ஸன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com