பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்க வாரம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுமுதலீட்டாளர்களின் அதீத பங்களிப்பால் கடந்த வார வர்த்தகத்தில் காளையின் ஆதிக்கம் மிகுந்து காணப்பட்டது.
பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்க வாரம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுமுதலீட்டாளர்களின் அதீத பங்களிப்பால் கடந்த வார வர்த்தகத்தில் காளையின் ஆதிக்கம் மிகுந்து காணப்பட்டது.
சாதகமான சர்வதேச நிலவரங்களால் வார தொடக்கத்தில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. பணவீக்கம் குறித்த ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவர வெளியீடு, வடகொரியா ஏவுகணை சோதனை விவகாரம் உள்ளிட்டவை பங்கு முதலீட்டாளர்களின் ஆர்வத்தை கட்டுப்படுத்தும் நிகழ்வுகளாக அமைந்தன.
இருப்பினும், கடந்த வாரத்தில் பங்குச் சந்தைகளில் காளையின் ஆதிக்கம் நீடித்ததன் காரணமாக வர்த்தகம் ஏற்றத்துடனே நிறைவடைந்தது.
மருந்து துறை நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டதையடுத்து அத்துறை நிறுவனப் பங்குகளின் விலை 4.79 சதவீதம் வரை ஏற்றம் கண்டது. பொறியியல் துறை நிறுவனப் பங்குகளின் விலை 2.85 சதவீதமும், மின்சாரம் 2.20 சதவீதமும், வங்கி 1.77 சதவீதமும், மோட்டார் வாகனம் 1.66 சதவீதமும், தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளின் விலை 1.54 சதவீதமும் அதிகரித்தன. இவை தவிர, தொழில்நுட்பம், எண்ணெய்-எரிவாயு துறை நிறுவனப் பங்குகளுக்கும் சந்தையில் அதிக வரவேற்பு காணப்பட்டது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், ஸன் பார்மா பங்கின் விலை அதிகபட்சமாக 11.20 சதவீதமும், டாடா மோட்டார்டிவிஆர் 8.69 சதவீதமும், ஆக்சிஸ் வங்கி 4.93 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 6.99 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 5.04 சதவீதமும் உயர்ந்தன.
பஜாஜ் ஆட்டோ பங்கின் விலை 3.71 சதவீதமும், டாடா ஸ்டீல் 3.63 சதவீதமும், ஹிந்துஸ்தான் யுனிலீவர் 3.48 சதவீதமும், ஏஷியன் பெயிண்ட் 3.45 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி வங்கி 3.43 சதவீதமும், லார்சன் அண்ட் டூப்ரோ 3.42 சதவீதமும், ரிலையன்ஸ் 3.21 சதவீதமும், ஓஎன்ஜிசி 3.09 சதவீதமும், இன்ஃபோசிஸ் 2.74 சதவீதமும், சிப்லா பங்கின் விலை 1.98 சதவீதமும் அதிகரித்தன.
லாப நோக்கம் கருதி விற்பனை செய்யப்பட்டதையடுத்து, விப்ரோ நிறுவனப் பங்கின் விலை 4.88 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி நிறுவனம் 4.35 சதவீதமும், பார்தி ஏர்டெல் 1.49 சதவீதமும், ஐடிசி 1.14 சதவீதமும், ஹீரோ மோட்டோகார்ப் 1.09 சதவீதமும் சரிந்தன.
கடந்த வாரத்தில் சென்செக்ஸில் இடம்பெற்ற 31 நிறுவனங்களுள் 22 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் காணப்பட்டன.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 585 புள்ளிகள் அதிகரித்து 32,272 புள்ளிகளாக நிலைத்தது. இப்பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.18,901.77 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 151 புள்ளிகள் அதிகரித்து 10,085 புள்ளிகளாக நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.1,45,714.27 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com