விரும்பிய பரிசுப் பொருள்களை ஆன்லைன் மூலம் அளிக்க உதவும் "வூஹு' செயலி

விரும்பும் பரிசுப் பொருள்களை ஆன்லைன் மூலம் வாங்கியளிக்க உதவும் "வூஹு' செயலியை குவிக்சில்வர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
விரும்பிய பரிசுப் பொருள்களை ஆன்லைன் மூலம் அளிக்க உதவும் "வூஹு' செயலி

விரும்பும் பரிசுப் பொருள்களை ஆன்லைன் மூலம் வாங்கியளிக்க உதவும் "வூஹு' செயலியை குவிக்சில்வர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரதாப் டி.பி. தெரிவித்துள்ளதாவது:
"வூஹு' செயலியைப் பயன்படுத்தி ஒருவர் ஆன்லைனில் விரும்பிய பரிசுப் பொருளை வாங்கி உரிய நபருக்கு அனுப்ப முடியும். நாடு தழுவிய அளவில் 400 நகரங்களில் 5000 கடைகளில் உள்ள 150க்கும் மேற்பட்ட பிராண்டு பரிசுப் பொருள்களிலிருந்து தேர்வு செய்து வாங்கிப் பரிசளிக்கலாம். 
இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுவதால் 
வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் நேரத்தை 
மிச்சப்படுத்தலாம்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் "வூஹு' செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் எளிதாக இதனை பயன்படுத்தலாம். 
பண்டிகை காலம் வரவிருப்பதையடுத்து நாம் விரும்பும் நபருக்கு பரிசுப் பொருள்களை அளிக்க விரும்புவருக்கு இந்த செயலி ஒரு வரப்பிரசாதமாகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com