உலகின் 3-ஆவது மிகப்பெரிய எரிசக்தி நிறுவனம் ரிலையன்ஸ்: இந்தியன் ஆயிலுக்கு 7-ஆவது இடம்

உலகின் 3-ஆவது மிகப்பெரிய எரிசக்தி நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) உருவெடுத்துள்ளது.
உலகின் 3-ஆவது மிகப்பெரிய எரிசக்தி நிறுவனம் ரிலையன்ஸ்: இந்தியன் ஆயிலுக்கு 7-ஆவது இடம்

உலகின் 3-ஆவது மிகப்பெரிய எரிசக்தி நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) உருவெடுத்துள்ளது.
இதுகுறித்து குளோபல் எனர்ஜி தரக்குறியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2017-ஆம் ஆண்டின் சர்வதேச எரிசக்தி டாப் 250 நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2016-ஆண்டில் 8-ஆவது இடத்தில் இருந்த இந்த நிறுவனம் ஐந்து படிகள் முன்னேறி சாதனை படைத்துள்ளது. முதல் மற்றும் இரண்டாவது இடங்களை முறையே ரஷியாவைச் சேர்ந்த கேஸ்ப்ரோம் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த இ.ஆன். ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன.
கடந்த 2015-ஆம் ஆண்டில் 66-ஆவது இடத்தில் இருந்த பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேகமாக முன்னேறி 2016-இல் 14-ஆவது இடத்தையும் 2017-இல் 7-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
இப்பட்டியலில் கடந்த ஆண்டில் 20-ஆவது இடத்தில் இருந்த ஓஎன்ஜிசி நிறுவனம் நடப்பு ஆண்டில் 11-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பாரத் பெட்ரோலியம் 27-ஆவது இடத்திலும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் 48-ஆவது இடத்திலும், பவர் கிரிட் கார்ப்பரேஷன் 81-ஆவது இடத்திலும், கெயில் நிறுவனம் 106-ஆவது இடத்திலும் உள்ளன.
இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 14 இந்திய நிறுவனங்களில் கோல் இந்தியா நிறுவனம் மட்டுமே 38-ஆவது இடத்திலிருந்து 45-ஆவது இடத்துக்கு பின்னடைவைக் கண்டுள்ளது என அந்த தரக்குறியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com