டாடா 'நெக்ஸான்' சென்னையில் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் 'நெக்ஸான்' என்ற புதிய வகை சொகுசு காரை சென்னையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தது.
டாடாவின் புதிய நெக்ஸான் காரை சென்னையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்த அந்நிறுவனத்தின் சந்தைப் பிரிவு தலைவர் விவேக் ஸ்ரீவாஸ்தவா.
டாடாவின் புதிய நெக்ஸான் காரை சென்னையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்த அந்நிறுவனத்தின் சந்தைப் பிரிவு தலைவர் விவேக் ஸ்ரீவாஸ்தவா.

டாடா மோட்டார்ஸ் 'நெக்ஸான்' என்ற புதிய வகை சொகுசு காரை சென்னையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் பயணிகள் வாகன வர்த்தகப் பிரிவு தலைவர் (சந்தைப்படுத்துதல்) விவேக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்ததாவது: இளைய தலைமுறை வாடிக்கையாளரின் தேவை மற்றும் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் 'நெக்ஸான்' சொகுசுக் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேர்த்தியான வடிவமைப்பு, நவீன தகவல் இணைப்பு தொழில்நுட்பம், வலிமையான செயல்திறன், மேம்பட்ட பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இப்புதிய கார் உள்ளடக்கியுள்ளது. 
'நெக்ஸான்' கார் - எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்இசட்ப்ளஸ் என நான்கு மாடல், நான்கு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
நாடு தழுவிய அளவில் 650 விற்பனை மையங்கள் மூலம் இப்புதிய கார் விற்பனை செய்யப்படும். அறிமுகச் சலுகையாக இதன் விலை ரூ.5.97 லட்சமாக (சென்னை விற்பனையக விலை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com