மருத்துவக் காப்பீட்டுக்கு தனி நிறுவனம்: ரிலையன்ஸ் கேபிடல் திட்டம்

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமான ரிலையன்ஸ் கேபிடல், மருத்துவ காப்பீட்டுக்கென தனி நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ரிலையன்ஸ் கேபிடல் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி, அவரது மகனும் நிறுவனத்தின் செயல் இயக்குநருமான ஜெய் அன்மோல் அம்பானி.

நிறுவன பங்குதாரர்கள் கலந்து கொண்ட ஆண்டு பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மும்பையில் நடைபெற்றது. அதில் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவன செயல் இயக்குநர் ஜெய் அன்மோல் அம்பானி இதுகுறித்து மேலும் தெரிவித்ததாவது: மருத்துவ காப்பீடு தொடர்பான சேவைகளை ரிலையன்ஸ் கேபிடல் ஏற்கெனவே வழங்கி வருகிறது. இருப்பினும், இந்த துறையில் ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இதனை உணர்ந்து, மருத்துவ காப்பீடு சில்லறை விற்பனையில் அதிக கவனம் செலுத்தும் வகையில் புதிய நிறுவனமொன்றை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான முதல் கட்ட ஒப்புதலை காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து (ஐஆர்டிஏஐ) ஏற்கெனவே பெற்றுள்ளோம். இப்புதிய நிறுவனம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தனது செயல்பாட்டை ஆரம்பிக்க வாய்ப்புள்ளது.
பரஸ்பர நிதி துறையில் ரிலையன்ஸ் கேபிடல் ரூ.3.5 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகித்து ஏற்கெனவே முதலிடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் அனைத்து வர்த்தக செயல்பாடுகளையும் சம்பந்தப்பட்ட துறைகளில் டாப் 3 நிறுவனங்களின் பட்டியலுக்குள் கொண்டு வருவதே எங்களது இலக்கு என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com