மாருதி வேகன்ஆர் விற்பனை 20 லட்சத்தை தாண்டி சாதனை

மாருதி சுஸுகி இந்தியாவின் வேகன்ஆர் காரின் மொத்த விற்பனை 20 லட்சம் மைல் கல்லைத் தாண்டி சாதனை படைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாருதி வேகன்ஆர் விற்பனை 20 லட்சத்தை தாண்டி சாதனை

மாருதி சுஸுகி இந்தியாவின் வேகன்ஆர் காரின் மொத்த விற்பனை 20 லட்சம் மைல் கல்லைத் தாண்டி சாதனை படைத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆர்.எஸ்.கல்ஸி (சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மாருதி 800, ஆல்டோ மாடல் கார்களுக்கு பிறகு மூன்றாவதாக வேகன்ஆர் இந்த சாதனை விற்பனையை எட்டியுள்ளது. 
வேகன் ஆர் அறிமுகம் செய்யப்பட்டு 133 மாதங்களுக்குப் பிறகு கடந்த 2011-இல் அதன் விற்பனை 10 லட்சத்தை தாண்டியது. இந்த நிலையில், அடுத்த 79 மாதங்களில் அதன் விற்பனை மேலும் 10 லட்சத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது. 
விசாலமான உள்புறம், வசதியான இருக்கைகள், எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட சிறப்பம்சங்களே அந்த மாடல் வரவேற்பை பெற காரணம். சந்தையில் நிறுவனத்தின் பங்களிப்பை வலுவான நிலையில் தக்க வைத்துக் கொள்ள, தனது தயாரிப்புகளின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது என்று கல்ஸி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com