சென்செக்ஸ் 95 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. உலோகத் துறை பங்குகளுக்கு தேவை அதிகரித்து அதிக விலைக்கு கைமாறியதையடுத்து

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. உலோகத் துறை பங்குகளுக்கு தேவை அதிகரித்து அதிக விலைக்கு கைமாறியதையடுத்து வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 95 புள்ளிகள் ஏற்றம் கண்டது.
ரஷியாவின் ரஷல் நிறுவன அலுமினிய இறக்குமதிக்கு அமெரிக்க கட்டுப்பாடுகளை விதித்தன் எதிரொலியாக சர்வதேச சந்தைகளில் அலுமினியத்தின் விலை அதிகரித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ரஷியா பதிலடி கொடுக்கும் என்ற நிலைப்பாட்டால் நிக்கல் உள்ளிட்ட இதர உலோகங்களின் விலையும் வெகுவாக உயர்ந்தது.
இந்த நிலையில், உற்பத்தி குறித்த அச்சப்பாட்டால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் காணாத அளவுக்கு புதிய உச்சத்தைத் தொட்டது. இதுவும், பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
முதலீட்டாளர்களைப் பொருத்தவரையில், காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கும் டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையால் அவர்கள் பங்குகளில் முதலீட்டை அதிகரித்தனர்.
அதிக தேவை காணப்பட்டதையடுத்து உலோகத் துறை பங்குகளின் விலை 4.46 சதவீதம் உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, பொறியியல் சாதனங்கள் 1.06 சதவீதமும், உள்கட்டமைப்பு 0.98 சதவீதமும், தொழில்நுட்பம் 0.88 சதவீதமும், ரியல் எஸ்டேட் துறை பங்குகளின் விலை 0.98 சதவீதமும் உயர்ந்தன.
அதேசமயம், எண்ணெய்-எரிவாயு துறை பங்குளின் விலை 1.31 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 0.86 சதவீதமும் குறைந்தன.
நால்கோ, ஹிண்டால்கோ, வேதாந்தா, செயில், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட உலோக துறை சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலை 9 சதவீதம் வரை லாபம் ஈட்டின.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த ஏழு மாதங்களில் இல்லாத வகையில் வீழ்ச்சியடைந்ததையடுத்து தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனப் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.
அதேசமயம், ஆக்ஸிஸ் வங்கி பங்கின் விலை 0.91 சதவீதமும், கோல் இந்தியா 0.77 சதவீதமும், கோட்டக் வங்கி 0.69 சதவீதமும், ஸன் பார்மா 0.61 சதவீதமும் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 95 புள்ளிகள் அதிகரித்து 34,427 புள்ளிகளில் நிலைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 39 புள்ளிகள் உயர்ந்து 10,565 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com