இந்தியா சிமென்ட்ஸ் நிகர லாபம் ரூ.21 கோடி

நாட்டின் முன்னணி சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான இந்தியா சிமென்ட்ஸ் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ரூ. 21.03 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இந்தியா சிமென்ட்ஸ் நிகர லாபம் ரூ.21 கோடி

நாட்டின் முன்னணி சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான இந்தியா சிமென்ட்ஸ் கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ரூ. 21.03 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிதிநிலைஅறிக்கையை அதன் நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன் (படம்) வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
நாடு முழுவதும் சிமென்ட் உற்பத்தி துறை கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத கால கட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 14 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக தென் இந்தியப் பகுதிகளில் உள்ள மாநிலங்கள் 20 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியைப் பெற்றுள்ளன. ஆந்திர மாநிலத்தில் கட்டுமானத் துறைக்கு அளித்த ஊக்கமும், தமிழகத்தில் மணல் விற்பனை மீதான தடை நீக்கப்பட்டதுமே இந்த வளர்ச்சிக்கு காரணம். இருப்பினும் சந்தையில் அதிகளவு சிமென்ட் விற்பனைக்கு வந்ததால் அதன் விலை கடுமையான நெருக்கடிக்கு உள்ளானது. 
இந்திய சிமென்ட்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டின் மொத்த வருமானம் ரூ.1,366.17 கோடி ஆகும். இது கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் ரூ.1,466.75 கோடியாக இருந்தது. நிகர லாபமாக ரூ.21.03 கோடியை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ.26.44 கோடியாக இருந்தது. நிறுவனம் மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக மொத்த செலவுகள் ரூ.1,426.32 கோடி என்ற நிலையிலிருந்து தற்போது ரூ.1,339.48 கோடியாக குறைந்துள்ளது.

விற்பனை 16 சதவீதம் அதிகரிப்பு: மொத்த சிமென்ட் விற்பனை 16 சதவீதம் உயர்ந்து, தற்போது 30.75 லட்சம் டன்னாக உள்ளது. இது கடந்த ஆண்டு 26.56 லட்சம் டன்னாக காணப்பட்டது. நிறுவனத்தின் மொத்த உற்பத்தித் திறனில் 80 சதவீதம் அளவுக்கு சிமென்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டு 67 சதவீதமாக இருந்தது. 
தென் மேற்குப் பருவமழை நன்றாகப் பெய்து வருவதால் அது கிராமப்புறத் தேவையை மேலும் அதிகரிக்கும். கட்டுமானத் துறை மேம்பாடு, வீட்டு வசதித் துறைக்கு அதிக நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இதனால், சிமென்ட் உற்பத்தித் திறன் மேலும் அதிகரிப்பதுடன், சிமென்ட்டுக்கு சிறந்த விலை கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com