வீடுகள் வாங்க எளிய முறையில் வங்கிக் கடனுதவி: வீட்டுமனைக் கண்காட்சியில் சிறப்பு அரங்குகள்

சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் வீட்டுமனைக் கண்காட்சியில் அடுக்குமாடிக் குடியிருப்பு முதல் தனி வீடுகள், வீட்டுமனைகள் வாங்க எளிய முறையில் வங்கிக் கடனுதவி பெறும் வகையில்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் வீட்டுமனைக் கண்காட்சியை சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார்  ராஜேஷ் லக்கானி. 
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் வீட்டுமனைக் கண்காட்சியை சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார்  ராஜேஷ் லக்கானி. 



சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் வீட்டுமனைக் கண்காட்சியில் அடுக்குமாடிக் குடியிருப்பு முதல் தனி வீடுகள், வீட்டுமனைகள் வாங்க எளிய முறையில் வங்கிக் கடனுதவி பெறும் வகையில் முன்னணி வங்கிகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், காஸா கிராண்டே இணைந்து நடத்தும் இரண்டு நாள் வீட்டு மனைக் கண்காட்சி-2018' சனிக்கிழமை தொடங்கியது. இந்தக் கண்காட்சியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் ராஜேஷ் லக்கானி தொடங்கி வைத்தார்.
40-க்கும் மேற்பட்ட அரங்குகள்: இந்தக் கண்காட்சியில் வி.ஜி.என். குழுமம், அசோக் நந்தவனம், அமர் பிரகாஷ், ஹிரா நந்தானி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட முன்னணி வீட்டுமனை விற்பனை நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், பாரத ஸ்டேட் வங்கி, ரெப்கோ ஹவுசிங் ஃபைனான்ஸ் ஆகியவையும் அரங்குகளை அமைத்துள்ளன. தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், உடனே வீடு கட்டி குடியேறுவதற்கு ஏதுவான மனைகள், முதலீடுகளுக்கான வீட்டுமனைகள், தவணை முறையில் வாங்கக் கூடிய வீட்டுமனைகள் ஆகியவை குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்குகள் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றன.
புதிய வடிவமைப்பில் வீடுகள்: இது குறித்து கண்காட்சியைப் பார்வையிட்ட பொதுமக்கள் கூறுகையில், இந்தக் கண்காட்சியில் விற்பனைக்குள்ள வீடுகள், மனைகள் எந்த இடத்தில் உள்ளன. அவற்றில் விலை, அதற்கான லே-அவுட், போக்குவரத்து வசதி, அருகில் உள்ள மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் விளக்குகின்றனர். மேலும், வங்கிக் கடனுதவி, அதற்குத் தேவைப்படும் சான்றுகள் குறித்தும் தெரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக ஒவ்வொரு அரங்கிலும் வெவ்வேறு விதமான புதிய வடிவமைப்பிலான வீடுகளும், அவை கட்ட பயன்படுத்தப்பட்ட கட்டுமானப் பொருள்கள் குறித்தும் கட்டுமான நிறுவனத்தினர் விளக்குவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது' என்றனர். 
எளிய முறையில் கடனுதவி: இந்தக் கண்காட்சியில் பொதுமக்கள் வீடுகள் வாங்கும் வகையில் எளிய முறையில் வங்கிக் கடனுதவி பெறும் வகையில் முன்னணி வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் அரங்குகளை அமைத்துள்ளன.
இந்த அரங்குகளில் வீடு வாங்குவோரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்குரிய கடன் தொகை குறித்து அப்போதே தெரிவிக்கப்படுகிறது. மேலும், பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வீடு வாங்குவோருக்கு செயலாக்க கட்டணம் இன்றி கடன் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கண்காட்சி தொடக்க விழாவில், ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸின் மேலாண் இயக்குநர் ஆர்.வரதராஜன், ஹிரா நந்தானி நிறுவனத்தின் வர்த்தகம், விற்பனைப் பிரிவின் பொது மேலாளர் சி.சுவாமிநாதன், பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் மணிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அனுமதி இலவசம்
சனிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்ற கண்காட்சியை 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 10.30 மணிக்குத் தொடங்கி இரவு 7.30 மணி வரை 
நடைபெறும் கண்காட்சியை பொதுமக்கள் மக்கள் இலவசமாகப் பார்வையிடலாம்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் வீட்டுமனைக் கண்காட்சியில் வீட்டு மனை குறித்து ஆர்வத்துடன் விவரங்களைக் கேட்டு அறியும் மக்கள்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் வீட்டுமனைக் கண்காட்சியில் வீட்டு மனை குறித்து ஆர்வத்துடன் விவரங்களைக் கேட்டு அறியும் மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com