மீண்டும் புதிய உச்சம் தொட்ட பங்குச் சந்தைகள்

இந்தியப் பங்குச் சந்தைகளின் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் மீண்டும் புதிய உச்சங்களைத் தொட்டன.
மீண்டும் புதிய உச்சம் தொட்ட பங்குச் சந்தைகள்


இந்தியப் பங்குச் சந்தைகளின் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் மீண்டும் புதிய உச்சங்களைத் தொட்டன.
மருந்துப் பொருள்கள் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளைச் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் அமோகமாக விற்பனையானதன் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தையைப் பொருத்தவரை, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தின் இறுதியில், சென்செக்ஸ் 38,286 புள்ளிகளாக நிலைத்தது. இது, முந்தைய நாளான 38,279 புள்ளிகளைவிட 7 புள்ளிகள் மட்டுமே அதிகம் ஆகும்.
எனினும், மும்பைப் பங்கு வர்த்தகத்தில் இது சாதனை அளவாகும்.
நிஃப்டி: தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிஃப்டியும், செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டது.
வர்த்தகத்தின் இறுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு 11,571 புள்ளிகளில் நிலைத்தது. இது, முந்தைய நாளைவிட19 புள்ளிகள் (0.17 சதவீதம்) அதிகம் ஆகும்.
மும்பை பங்குச் சந்தையும், தேசியப் பங்குச் சந்தையும் தொடர்ந்து 3-ஆவது நாளாக ஏறுமுகத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகப் போரில் ஈடுபடக் கூடும் என்ற அஞ்சப்பட்டு வந்த உலகின் இரு பெரு பொருளாதார சக்திகளான அமெரிக்காவும், சீனாவும், இந்த வாரம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளன.
இது, முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகளை வாங்கிக் குவித்ததாகக் கூறப்படுகிறது.
இத்தகைய காரணங்களால் பங்குச் சந்தைகள் மீண்டும் வரலாற்று உச்சங்களைத் தொட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com