பட்ஜெட் எதிரொலி! பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 839 புள்ளிகள் சரிவு

பட்ஜெட் அறிவிப்புகள் சாதகமாக இல்லாததால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது. இதன் காரணமாக, சென்செக்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான
பட்ஜெட் எதிரொலி! பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 839 புள்ளிகள் சரிவு

பட்ஜெட் அறிவிப்புகள் சாதகமாக இல்லாததால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது. இதன் காரணமாக, சென்செக்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக மோசமான சரிவைக் கண்டது.
நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை 3.2 சதவீதமாக இருக்கும் என முன்பு மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இது 3.5 சதவீதத்தை எட்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, பங்குச் சந்தைகளில் ஈட்டும் வருவாய்க்கு வரி விதிக்கும் முடிவையும் அவர் வெளியிட்டார். இத்தகைய அறிவிப்புகள் முதலீட்டாளர்களுக்கு பேரிடியாக அமைந்தது. 
தரக் குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச், அதிகரித்து வரும் மத்திய அரசின் கடன் இந்தியாவின் தரக்குறியீடை உயர்த்துவதில் தடைகளை ஏற்படுத்தும் என தெரிவித்தது. மேலும், சர்வதேச சந்தை நிலவரங்களும் சாதகமாக இல்லாதது பங்கு வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்து விட்டு வெளியேறினர். இதையடுத்து, பங்குகளின் விலை பாதாளத்துக்கு சென்றதால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ. 4.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டது.
சென்செக்ஸில் இடம்பெற்றுள்ள அனைத்து துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்களும் சரிவுடனேயே முடிவடைந்தன. குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறை குறியீட்டெண் 6.28 சதவீதமும், உள்கட்டமைப்பு 4.03 சதவீதமும், மின்சாரம் 3.94 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 3.59 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன.
பஜாஜ் ஆட்டோ பங்கின் விலை 4.90 சதவீதமும், பார்தி ஏர்டெல் 4.62 சதவீதமும் சரிந்தன. இவைதவிர, மாருதி சுஸுகி, ஆக்ஸிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், இன்டஸ்இண்ட் வவங்கி, என்டிபிசி நிறுவனப் பங்குகளின் விலை 4.28 சதவீதம் வரை குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 839 புள்ளிகள் (2.34%) சரிந்து 35,066 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 256 புள்ளிகள் (2.33%) வீழ்ச்சி கண்டு 10,760 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com