சந்தைக்கு வரும் பொதுத் துறை நிறுவனப் பங்குகள்

மத்திய அரசுக்குச் சொந்தமான 8 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள், அடுத்த நிதியாண்டில் பங்குச் சந்தைகளில் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தைக்கு வரும் பொதுத் துறை நிறுவனப் பங்குகள்

மத்திய அரசுக்குச் சொந்தமான 8 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள், அடுத்த நிதியாண்டில் பங்குச் சந்தைகளில் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் ஒரு பகுதி பங்குச் சந்தைகளுக்கு வரவிருக்கின்றன.
இந்தப் பங்குகள், பொது வெளியீட்டுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் பங்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப படிப்படியாக பங்குச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்கிறார் முதலீடு மற்றும் பொதுமக்கள் சொத்து நிர்வாகத் துறைச் செயலர் நீரஜ் குப்தா.
பொது வெளியீட்டுக்கு வரும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் பொது பங்கு வெளியீட்டுக்கான அனுமதியை, பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியிடமிருந்து ஏற்கெனவே பெற்றுவிட்டது.
இது தவிர, மத்திய அரசுக்குச் சொந்தமான கட்டமைப்புத் துறை நிறுவனம் ஆர்ஐடிஇஎஸ், இந்தியன் ரினிவபில் எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜென்சி, பாரத் டைனமிக்ஸ், மிஸ்ரா தாடு நிகாம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் பங்கு வெளியீடு தொடர்பான ஆவணங்களை செபியிடம் தற்போதுதான் சமர்ப்பித்துள்ளன.
ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடட்டின் 10 சதவீதப் பங்குகளையும், ஆர்ஐடிஇஎஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான 12 சதவீத பங்குகளையும் சந்தையில் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொதுத் துறை நிறுவனங்களின் உண்மையான பங்கு மதிப்புகளை வெளிக் கொணரவும், அத்தகைய நிறுவனங்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com