டாடா மோட்டார்ஸ் விற்பனை 52% வளர்ச்சி

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசம்பர் மாத வாகன விற்பனை 52.48 சதவீதம் அதிகரித்தது.
டாடா மோட்டார்ஸ் விற்பனை 52% வளர்ச்சி

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசம்பர் மாத வாகன விற்பனை 52.48 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
டாடா மோட்டார்ஸ் சென்ற டிசம்பரில் 54,627 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த 2016 டிசம்பர் மாத விற்பனையான 35,825 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 52.48 சதவீதம் அதிகம்.
உள்நாட்டில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 24,998 என்ற எண்ணிக்கையிலிருந்து 61.8 சதவீதம் அதிகரித்து 40,447ஆனது. 
பல்வேறு பிரிவுகளில் புதிய மாடல்களின் அறிமுகம், பிஎஸ்4 ரக வாகனங்கள் அதிக அளவில் சந்தையில் விற்பனைக்கு வந்தது உள்ளிட்ட காரணங்களால் வர்த்தக வாகனங்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது. 
உள்கட்டமைப்புத் துறையில் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்து வருவதையடுத்து, புதிய ரக வர்த்தக வாகனங்களுக்கான தேவை சூடுபிடித்துள்ளது.
பயணிகள் வாகன விற்பனை டிசம்பரில் 30.96 சதவீதம் அதிகரித்து 14,180ஆக காணப்பட்டது.
கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு வாகன விற்பனை சென்ற டிசம்பரில்தான் சிறப்பான அளவுக்கு உயர்ந்துள்ளது என டாடா மோட்டார்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com