'தூய்மை பாரதம்' விழிப்புணர்வு: ஜன.31 வரை செயல்படுத்த எஸ்.பி.ஐ. முடிவு

மத்திய அரசின் 'தூய்மை பாரதம்' விழிப்புணர்வு திட்டத்தை ஜன.31-ஆம் தேதி வரை செயல்படுத்த பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் 'தூய்மை பாரதம்' விழிப்புணர்வுத் திட்டம் குறித்து விளக்கிய (இடமிருந்து) பாரத ஸ்டேட் வங்கி துணைப் பொது மேலாளர் நிரஞ்சனா, 

இது குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்ட தலைமைப் பொதுமேலாளர் பி.ரமேஷ்பாபு, துணைப் பொது மேலாளர்கள் நிரஞ்சனா, பி.வி.ராமபிரசாத் ஆகியோர் சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:- 
தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் ஜன. 31-ஆம் தேதி வரை தூய்மை வாரம் கடைப்பிடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தப் பணியை பாரத ஸ்டேட் வங்கி தொடர்ந்து மேற்கொள்ளும். 
தமிழ்நாடு, புதுச்சேரியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் அனைத்து வட்டாரங்களில் உள்ள ஒவ்வொரு கிளையிலும் இது தொடர்பான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் எஸ்பிஐ கிளை சார்பில் தஞ்சாவூர் நகராட்சிக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் 10 பெரிய குப்பை தொட்டிகளும், 10 அடைப்பு தொட்டிகளும், சேலம் கிளை சார்பில் குப்பை அகற்றும் பணிக்காக ரூ.18 லட்சம் செலவில் பேட்டரியில் இயங்கும் 10 வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. 
அனைத்து மண்டலங்களும் தங்களது (ஏடிஎம்) தானியங்கி பணம் வழங்கும் கருவி உள்ள அறையில் தூய்மையை வலியுறுத்தும் வகையில் பதாகைகள் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com