ஏர் இந்தியா பங்கு விற்பனை தோல்வி: அருண் ஜேட்லி அடுத்தக் கட்ட ஆலோசனை

ஏர் இந்தியா பங்கு விற்பனை முயற்சி தோல்வியடைந்த நிலையில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி
ஏர் இந்தியா பங்கு விற்பனை தோல்வி: அருண் ஜேட்லி அடுத்தக் கட்ட ஆலோசனை

ஏர் இந்தியா பங்கு விற்பனை முயற்சி தோல்வியடைந்த நிலையில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மூத்த அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி திங்கள்கிழமை தீவிர ஆலோசனை மேற்கொண்டார். 
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கடனில் சிக்கி தவித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. அந்த நிறுவனத்தை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில், எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிதி அமைச்சராக தற்காலிகமாக பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல், உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏர் இந்தியா பங்கு விற்பனையை வேறு வழிமுறைகளில் எவ்வாறு வெற்றிகரமாக மேற்கொள்ளலாம் என்பது குறித்து அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com