பிப்ரவரி மாத வாகன விற்பனை நிலவரம் 

பிப்ரவரி மாத வாகன விற்பனை நிலவரம் 
பிப்ரவரி மாத வாகன விற்பனை நிலவரம் 

மாருதி சுஸுகி 
15% நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா சென்ற பிப்ரவரியில் 1,49,824 கார்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவு விற்பனையான 1,30,280 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகம். 
உள்நாட்டில் கார் விற்பனை 1,20,735-லிருந்து 14.2 சதவீதம் உயர்ந்து 1,37,900-ஆனது. ஆல்டோ, வேகன்ஆர் உள்ளிட்ட சிறிய ரக கார் விற்பனை 2.1 சதவீதம் அதிகரித்து 33,798-ஆக காணப்பட்டது. ஸ்விப்ட், எஸ்டிலோ, டிசையர் மற்றும் பலேனோ கார்கள் விற்பனை 47,002-லிருந்து 38.7 சதவீதம் அதிகரித்து 65,213-ஆனது. ஏற்றுமதி 24.9 சதவீதம் உயர்ந்து 11,924-ஆக இருந்தது என மாருதி சுஸுகி இந்தியா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் 
38%வர்த்தகம் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான தேவை சூடுபிடித்ததையடுத்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை பிப்ரவரியில் 38 சதவீதம் அதிகரித்து 58,993-ஆனது. உள்நாட்டில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 36 சதவீதம் உயர்ந்து 41,222-ஆனது. வாடிக்கையாளர்களிடையே டியாகோ, டிகோர், நெக்ஸான், ஹெக்ஸா வாகனங்களுக்கு பெரும் வரவேற்பு காணப்பட்டதையடுத்து, பயணிகள் வாகன விற்பனை 12,272 என்ற எண்ணிக்கையிலிருந்து 45 சதவீதம் அதிகரித்து 17,771-ஆனது. அதேசமயம், ஏற்றுமதி 3 சதவீதம் குறைந்து 4,768-ஆக காணப்பட்டது என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ 
31% பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகன விற்பனை நடப்பு ஆண்டு பிப்ரவரியில் 3,57,883-ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே கால அளவு விற்பனையான 2,73,513 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 31 சதவீதம் அதிகமாகும்.
உள்நாட்டில் வாகன விற்பனை 35 சதவீதம் உயர்ந்து 2,14,023-ஆக இருந்தது. மோட்டார் சைக்கிள் விற்பனை 23 சதவீதம் அதிகரித்து 1,75,489-ஆக காணப்பட்டது. வர்த்தக வாகன விற்பனை 129 சதவீதம் ஏற்றம் கண்டு 38,534-ஆனது. ஏற்றுமதி 26 சதவீதம் அதிகரித்து 1,43,860-ஆகவும் இருந்தது என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.


அசோக் லேலண்ட் 
29% ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் சென்ற பிப்ரவரி மாதத்தில் 18,181 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு விற்பனையான 14,067 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 29 சதவீதம் அதிகம்.
நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 11,329லிருந்து 21 சதவீதம் உயர்ந்து 13,726-ஆனது. இலகு ரக வர்த்தக வாகன விற்பனை 63 சதவீதம் அதிகரித்து 4,455-ஆனது என அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார் 
37% டிவிஎஸ் மோட்டார் சென்ற பிப்ரவரியில் 2,90,673 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 2,11,470 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 37 சதவீதம் அதிகம். 
இருசக்கர வாகன விற்பனை 2,06,247 என்ற எண்ணிக்கையிலிருந்து 36.2 சதவீதம் உயர்ந்து 2,80,942-ஆக இருந்தது. உள்நாட்டில் வாகன விற்பனை 33.5 சதவீதம் அதிகரித்து 2,30,353-ஆனது.
மோட்டார் சைக்கிள் விற்பனை 92 சதவீதம் வளர்ச்சி கண்டு 1,13,296-ஆகவும், ஸ்கூட்டர்கள் விற்பனை 35.6 சதவீதம் உயர்ந்து 93,573-ஆகவும் காணப்பட்டது.
மூன்று சக்கர வாகன விற்பனை 5,223-லிருந்து 86.3 சதவீதம் உயர்ந்து 9,731-ஆனது. ஏற்றுமதி 53.2 சதவீதம் அதிகரித்து 58,564-ஆக காணப்பட்டது என டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது.

ஹீரோ மேட்டோகார்ப் 
20% இருசக்கர வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை நடப்பு ஆண்டு பிப்ரவரியில் 6,29,597-ஆக இருந்தது. கடந்த ஆண்டு விற்பனையான 5,24,766 வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 20 சதவீதம் அதிகமாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com