ரெனோ டஸ்டர் கார் விலை ரூ.1 லட்சம் வரை குறைப்பு

இந்தியாவில் சொகுசு வகை டஸ்டர் காரின் விலையை ரூ.1 லட்சம் வரை குறைப்பதாக ரெனோ இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
ரெனோ டஸ்டர் கார் விலை ரூ.1 லட்சம் வரை குறைப்பு

இந்தியாவில் சொகுசு வகை டஸ்டர் காரின் விலையை ரூ.1 லட்சம் வரை குறைப்பதாக ரெனோ இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சுமித் சாஹ்னி தெரிவித்துள்ளதாவது:
கிவிட் கார்களைப் போன்று டஸ்டர் கார்களின் விற்பனையையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, வரி குறைப்பின் பலன்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. உள்நாட்டில் டஸ்டர் கார் விற்பனையை அதிகரித்திடும் வகையில் அதன் விலை ரூ.1 லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
முன்பு பெட்ரோல் வகை டஸ்டர் காரின் விலை ரூ.8.5 லட்சம் முதல் ரூ.10.24 லட்சமாக இருந்தது. இது தற்போது ரூ.7.95 லட்சம் முதல் ரூ.9.95 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, டீசல் வகை டஸ்டர் காரின் விலை முன்பு ரூ.9.45 லட்சம் முதல் ரூ.13.79 லட்சம் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அது தற்போது, ரூ.8.95 லட்சம் முதல் ரூ.12.79 லட்சமாக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
ரெனோ நிறுவன கார்கள் சென்னை ஆலையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com