ஹோண்டாவின் புதிய 'பிளேடு' பைக்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) 'பிளேடு' என்ற புதிய வகை மோட்டார்சைக்கிளை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
ஹோண்டாவின் புதிய 'பிளேடு' பைக்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) 'பிளேடு' என்ற புதிய வகை மோட்டார்சைக்கிளை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் (விற்பனை&சந்தைப்படுத்துதல்) யவீந்தர் சிங் குலேரியா கூறியது:
'பிளேடு' மாடல் பைக் கடந்த மாதம் நடைபெற்ற மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. உறுதியளித்தபடி, அந்த மாடல் பைக்கை இந்திய சந்தையில் இந்த மாதம் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
'பிளேடு' பைக்கில் 162.71சிசி திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 8,500 ஆர்பிஎம்-இல் 13.93 பிஹெச்பி சக்தியை உருவாக்க வல்லது. மேலும், மோனோ ஸாக்கப்சர், 130 எம்எம் அகலமுள்ள டயர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. இப்புதிய மாடல் பைக்கின் விலை ரூ.78,500-ஆக (தில்லி விற்பனையக விலை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com