ரூ.1.5 கோடியில் புதிய கார்: மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம்

ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசுக் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் செடன் பிரிவில் முற்றிலும் புதிய ஏஎம்ஜி ஈ-63 என்ற காரை இந்தியாவில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தது. 

இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ரோலண்ட் ஃபோல்ஜர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உள்நாட்டு வாடிக்கையாளர்களிடையே ஏஎம்ஜி தொழில்நுட்ப ரக கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையடுத்தே, இப்புதிய ரக காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளோம். 4 லிட்டர் பை-டர்போ என்ஜின் பொருத்தப்பட்ட இக்காரின் விலை ரூ.1.5 கோடியிலிருந்து தொடங்குகிறது. நடப்பு ஆண்டில் இதே ரகத்தைச் சேர்ந்த மேலும் பல புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளோம்.
அதிவேக செயல்பாட்டைக் கொண்ட கார் பிரிவில் நாங்கள் ஏற்கெனவே 50 சதவீத பங்களிப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com