விரிவாக்க திட்டங்களில் ரூ.1,000 கோடி முதலீடு: அசோக் லேலண்ட்

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் விரிவாக்க திட்டங்களுக்காக ரூ.1,000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
விரிவாக்க திட்டங்களில் ரூ.1,000 கோடி முதலீடு: அசோக் லேலண்ட்

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் விரிவாக்க திட்டங்களுக்காக ரூ.1,000 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஆண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் கே.தாசரி கூறியதாவது: மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.667.38 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2016-17 நிதி ஆண்டின் இதே கால அளவில் இது ரூ.476.16 கோடியாக மட்டுமே காணப்பட்டது. வருவாய் ரூ.7,133.43 கோடியிலிருந்து உயர்ந்து ரூ.8,830.22 கோடியானது. 
கடந்த 2017-18 நிதி ஆண்டைப் பொருத்தவரை நிறுவனத்துக்கு அற்புதமான ஆண்டாக அமைந்திருந்தது. மொத்த வாகன விற்பனை 14 சதவீதம் அதிகரித்து 1,16,534 ஆகவும், ஏற்றுமதி 36 சதவீதமும் ஏற்றம் பெற்றது. கடந்த நிதி ஆண்டில் மொத்த வருவாயில் வெளிநாட்டு விற்பனையின் பங்களிப்பு 15 சதவீதம்.
கடந்த ஆண்டில் அசோக் லேலண்ட் பங்குகளின் செயல்பாடு எங்களது போட்டியாளர்களை விஞ்சும் வகையில் அமைந்திருந்தது. நடப்பு நிதி ஆண்டிலும் இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
நடப்பாண்டில் பல புதிய தயாரிப்புகளை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தவுள்ளோம். மேலும், விரிவாக்க திட்டங்களுக்காக ரூ.1,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதனைக் கொண்டு ஆந்திர மாநிலத்தில் புதிய ஆலையை அமைக்கவுள்ளோம் என்றார் அவர். 
கடந்த நிதி ஆண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.2.43 ஈவுத்தொகை வழங்க அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com